நடப்பாண்டில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடப்பது உறுதி-அமைச்சர் செங்கோட்டையன்

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை அமைந்தகரையில் அம்மா மினி கிளினிக்கை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த கல்வி ஆண்டு ஜீரோ கல்வி ஆண்டாக அறிவிக்கப்படாது என்றும் விரைவில் பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகும் என்றார்.
கல்வி தொலைக்காட்சியில் திருவள்ளுவர் படம் காவி நிறத்தில் இடம் பெற்றது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலரிடம் விளக்கம் கேட்கப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்..
Comments