மாஸ்டர் படத்தை திரையரங்குகளில் வெளியிட உதவும் விஜய்க்கு நன்றி- தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர்

0 6463
மாஸ்டர் படத்தை திரையரங்குகளில் வெளியிட உதவும் விஜய்க்கு நன்றி- தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர்

டிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியிடப்படுவது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாஸ்டர் படத்தை படக்குழுவினர் நினைத்திருந்தால் ஓ.டி.டியில் வெளியிட்டிருக்கலாம் என்றும் ஆனால் காத்திருந்து திரையரங்கில்தான் வெளியிடுவோம் என்று உறுதியாக நின்றதற்கு நன்றி என்றும் கூறினார்.

பொங்கலுக்கு வெளியாகும் புதிய படங்களுக்கான கட்டணக் குறைப்பு பற்றி அரசிடம் பேசி முடிவெடுப்போம் என்று கூறிய திருப்பூர் சுப்பிரமணியம், நிச்சயம் கட்டண உயர்வு இருக்காது என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments