இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்... தோல்வியை தவிர்க்க ஆஸ்திரேலிய அணி போராட்டம்

மெல்பேர்னில் நடைபெறும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் தோல்வியை தவிர்க்க ஆஸ்திரேலிய அணி போராடி வருகிறது.
போட்டியின் 3ம் நாளான இன்று முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்களை குவித்தது. ரஹானே 112 ரன்னிலும், ரவீந்திர ஜடேஜா அரைசதம் அடித்த நிலையில், 57 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
131 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பம் முதலே திணறியது. அடுத்தடுத்து முக்கிய 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 133 ரன்களை எடுத்து 2 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
போட்டி நிறைவடைய இன்னும் 2 நாள்கள் மீதமுள்ள நிலையில் பந்துவீச்சாளர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் நாளை சிறப்பாக பந்துவீசி ஆஸ்திரேலிய அணியை ரன்குவிக்க விடாமல் தடுத்து, விரைவாக விக்கெட்டை கைப்பற்றும்பட்சத்தில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.
Comments