தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

0 1769
அடுத்த 24 மணிநேரத்தில் தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பரப்பில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது.

இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தென்கடலோர மற்றும் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், 29 ஆம் தேதி அன்று தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும்,தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

30ஆம் தேதி அன்று கடலோர மாவட்டங்களில், அதனை ஒட்டிய உள் மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழையும், 31 ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. குமரிக்கடல், தென்மேற்கு அரபிக்கடல், மத்திய மேற்கு அரபிக்கடலில் மணிக்கு 45 முதல் 55 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் , மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments