நாடு முழுவதும் கொரோனா குறையும் நிலையில் கேரளாவில் அதிகரிப்பு

நாடு முழுவதும் கொரோனா பரவும் வேகம் குறைந்து வரும் நிலையில் கேரளத்தில் மட்டும் அதிகரித்து வருகிறது.
அங்கு கொரோனா சோதனை செய்தோரில் தொற்று கண்டறியப்பட்டோரின் விகிதம் 10 விழுக்காடாக அதிகரித்துள்ளது. வேறெந்த மாநிலத்தையும் விடக் கேரளத்தில் கொரோனா சோதனை செய்தோரில் தொற்று கண்டறியப்பட்டோரின் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நவம்பர் 30 முதல் டிசம்பர் 13 வரையான இரு வாரங்களில் தொற்று கண்டறியப்பட்டோர் விகிதம் ஒன்பது புள்ளி நான்கு விழுக்காடாக இருந்தது. இது டிசம்பர் 13 முதல் 26 வரையான இரு வாரங்களில் 10 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
இதே காலக்கட்டத்தில் தேசிய அளவில் தொற்று கண்டறியப்பட்டோர் விகிதம் மூன்று விழுக்காட்டில் இருந்து 2 புள்ளி 2 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
Comments