ஆந்திராவில் தெருவிற்கு பெயர் வைப்பது தொடர்பாக இருதரப்பினரிடையே கடும் மோதல்

0 927

ஆந்திர மாநிலத்தில் தெருவிற்கு பெயர் வைப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது.

தலைநகர் அமராவதியில் மாநில தலைமை செயலகம் அமைந்துள்ள வெலகம்புடி பகுதியில் இருக்கும் காலனி ஒன்றிற்கு, அலங்கார வளைவு ஏற்படுத்தி பெயர் வைப்பது தொடர்பாக இந்தப்பகுதியைச் சேர்ந்த இருதரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதுதொடர்பாக நேற்று இரவு இவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு,பயங்கர மோதலாக வெடித்தது. கட்டை மற்றும் கற்களால் இருதரப்பினரும் பயங்கரமாக தாக்கி கொண்டதால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.

மோதலில் மரியம்மா என்பவர் உயிரிழந்தார்.10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மோதல் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்‍.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments