இங்கிலாந்தில் இருந்து தமிழகம் திரும்பிய 10 பேர், தாமாக முன் வந்து கொரோனா பரிசோதனை செய்துகொள்ள பதிவு

இங்கிலாந்தில் இருந்து தமிழகம் திரும்பிய 10 பேர், தாமாக முன் வந்து கொரோனா பரிசோதனை செய்துகொள்ள பதிவு
அண்மையில் இங்கிலாந்தில் இருந்து தமிழகம் திரும்பிய 10 பேர், தாமாக முன் வந்து கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள பதிவு செய்துள்ளனர்.
உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று லண்டனில் வேகமாக பரவி வரும் நிலையில், அங்கிருந்து நவம்பர் 25-ம் தேதி முதல், டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் தமிழகம் வந்தவர்கள் 104 என்ற இலவச உதவி எண்ணை அழைத்து கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருந்தது.
அதன்படி, அண்மையில் இங்கிலாந்தில் இருந்து தமிழகம் திரும்பிய 10 பேர், 104 என்ற எண்ணை அழைத்து, கொரோனா பரிசோதனை செய்துகொள்ள பெயர், விலாசங்களை கொடுத்து பதிவு செய்துள்ளனர்.
Comments