கங்குபாய் கதியாவாடி இந்தி திரைப்பட விவகாரம் தொடர்பாக ஆலியா பட், சஞ்சய் லீலா பன்சாலி மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

0 1883
கங்குபாய் கதியாவாடி இந்தி திரைப்பட விவகாரம் தொடர்பாக ஆலியா பட், சஞ்சய் லீலா பன்சாலி மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

ங்குபாய் கதியாவாடி பட விவகாரம் தொடர்பாக இந்தி நடிகை ஆலியா பட், திரைப்பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

சிவப்பு விளக்கு பகுதியில் விபச்சார தொழில் நடத்திய கங்குபாய் வாழ்க்கையை மையமாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது. படம் செப்டம்பரில் ரிலீஸ் ஆக இருந்தநிலையில் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

படத்தில் கங்குபாய் கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாகவும், இதனால் தன்னை விபச்சார குடும்பம் என்று கூறி சிலர் தாக்கியதாகவும், எனவே படத்துக்கு தடை விதிக்க வேண்டுமென கங்குபாயின் மகன் பாபுஜி ராவ்ஜி ஷா வழக்கு தொடுத்துள்ளார்.

இதுகுறித்து ஜனவரி 7க்குள் பதிலளிக்க பன்சாலி, ஆலியா பட் உள்ளிட்டோருக்கு அவகாசம் உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments