மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 47,276 என்னும் புதிய உச்சம் தொட்டது..!

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் முந்நூறு புள்ளிகளுக்கு மேல் அதிகரித்துப் புதிய உச்சத்தைத் தொட்டது.
கொரோனா பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டதால் பொருளாதார நடவடிக்கைகள் முழுவேகம் பெற்றுள்ளன.
இந்நிலையில் இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 303 புள்ளிகள் அதிகரித்து 47 ஆயிரத்து 276 என்கிற புதிய உச்சத்தைத் தொட்டது.
தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி 94 புள்ளிகள் உயர்ந்து 13 ஆயிரத்து 844 ஆக இருந்தது. அமெரிக்காவில் கொரோனா நிவாரணம், நலவாழ்வுத் திட்டங்களுக்கு 169 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க அதிபர் டிரம்ப் கையொப்பமிட்டது, பிரிட்டன் - ஐரோப்பிய ஒன்றியம் இடையே புதிய வணிக உடன்பாடு நடைமுறைக்கு வர உள்ளது ஆகியவற்றால் பங்குச்சந்தையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் கருதுகின்றனர்.
Comments