சிபிஐ கட்டுப்பாட்டில் இருந்த 103 கிலோ தங்கம் மாயமான விவகாரம்... சிபிசிஐடி போலீசார் விசாரணை

சிபிஐ கட்டுபாட்டில் இருந்த சுரானா நிறுவனத்தின் 103 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில் திருட்டு வழக்கு பதிவு செய்துள்ள சிபிசிஐடி போலீசார், விசாரணையை தொடங்கியுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவுப்படி சிபிசிஐடி-யிடம் புகாரளித்த வங்கி தரப்பு அதிகாரி ராமசுப்பிரமணியன், விசாரணை அதிகாரியான சிபிசிஐடி எஸ்.பி விஜயகுமாரிடம் சம்மந்தப்பட்ட ஆவணங்களை வழங்கினார்.
தங்கம் வைக்கப்பட்டிருந்த லாக்கரை ஆய்வு செய்தது தொடர்பாக 20 நிமிட வீடியோ ஆதாரங்களையும் ராமசுப்பிரமணியன் சிபிசிஐடியிடம் சமர்ப்பித்தார். இதன் அடிப்படையில் அடுத்தடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
Comments