மீண்டும் முதலமைச்சராகத் தனக்கு விருப்பமில்லை, நெருக்கடியால் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளேன் -பீகார் முதல்வர்

மீண்டும் முதலமைச்சராக வேண்டுமெனத் தான் விரும்பவில்லை என்றும், நெருக்கடி காரணமாகப் பதவியேற்றுள்ளதாகவும் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜக 74 தொகுதிகளையும், ஐக்கிய ஜனதாதளம் 43 தொகுதிகளையும் பிடித்தன. இந்தக் கூட்டணி ஆட்சியில் நிதிஷ்குமாரே முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில் அருணாசலப் பிரதேசத்தில் ஐக்கிய ஜனதாதளச் சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் பாஜகவில் இணைந்ததாலும், பாஜக ஆதரிக்கும் லவ் ஜிகாத் தடைச் சட்டத்தை ஐக்கிய ஜனதாதளம் எதிர்ப்பதாலும் கூட்டணியில் கசப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாட்னாவில் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த நிதிஷ்குமார், விரும்பி முதலமைச்சராகவில்லை என்றார்.
Comments