கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தின் ஒத்திகை 4 மாநிலங்களில் தொடங்கியது..!

கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தின் ஒத்திகை 4 மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.
கொரோனா தடுப்பூசி போடும்போது அவற்றை ஊர் ஊராக கொண்டு செல்வது, குளிரூட்டப்பட்ட வசதிகளில் சேமித்து வைப்பது, மருத்துவமனைகளுக்கு விநியோகிப்பது, பயனாளிகளுக்கு தடுப்பூசி போடுவது, தடுப்பூசி போட்ட பின்னர் ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் எற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிப்பது என பல்வேறு நடைமுறைகள் உள்ளன.
போக்குவரத்து, சேமிப்பு, விநியோகம், பயன்படுத்துதல் என நான்கு நிலைகளில் கொரோனா தடுப்பூசி திட்டம் சிக்கலின்றி நடைபெற கோவின் என்ற சாஃப்ட்வேரும் உருவாக்கப்பட்டுள்ளது.
இவற்றை சரிபார்க்கும் நோக்குடன் இன்றும் நாளையும் ஆந்திரப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், அசாம் ஆகிய 4 மாநிலங்களில் ஒத்திகை நடைபெறுகிறது. தடுப்பூசி திட்டத்திற்காக ஏற்கெனவே 2 ஆயிரத்து 360 பயிற்சி முகாம்கள் மூலம் 7 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி பெற்றவர்கள் மூலம், 4 மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் நடைபெற்று வரும் ஒத்திகையின்போது ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும். அதன் அடிப்படையில், கடைசி நேரத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறிந்து சரிசெய்ய மத்திய அரசு நடவடிக்கைகள் எடுக்கும்.
Comments