புதிய மாவட்டம் மயிலாடுதுறையின் முக்கிய சிறப்புகள்

0 5075
புதிய மாவட்டம் மயிலாடுதுறையின் முக்கிய சிறப்புகள்

புதிய மாவட்டமாக மயிலாடுதுறை இன்று உருவாவதன் மூலம், அப்பகுதி மக்களின் கால்நூற்றாண்டுக் கோரிக்கை நிறைவேறியுள்ளது.

காவிரி பாயும் டெல்டா பகுதியின் முக்கிய இடங்களில் ஒன்று மயிலாடுதுறை...

மாயூரம், மாயவரம் என்றெல்லாம் அழைக்கப்பட்ட மயிலாடுதுறை, வரலாற்றில் இடம்பெற்ற இடங்களில் ஒன்றாகும்...

கிரைண்டர் உருவாக்கம், பட்டுப்புடவை நெய்தல், சீவல், கடலை மிட்டாய் தயாரிப்பு போன்றவை இந்த ஊரின் சிறப்புகள்.

150 ஆண்டுகளுக்கு முன்பே ரயில் ஓடிய சிறப்பும் இந்த ஊருக்கு உண்டு.

திருக்கடையூர், திருமணஞ்சேரி போன்ற சைவ, வைணவத் தலங்களும் இம்மாவட்டத்தில்தான் அமைந்துள்ளன.

காவிரி ஆற்றங்கரையில் ஆண்டுதோறும் நடக்கும் மயிலாடுதுறை துலா உற்சவமும், சீர்காழியில் நடக்கும் முலைப்பால் திருவிழாவும் மக்கள் அதிகளவில் பங்கேற்கும் விழாக்களாகும்.

தமிழர்கள் வரலாற்றில் இடம்பெற்ற பூம்புகார், தரங்கம்பாடி ஆகிய இடங்களும், மாயூரம் வேதநாயகம் பிள்ளை போன்றவர்கள் நீதி பரிபாலனம் செய்த நீதிமன்றமும் இருப்பது இம்மாவட்டத்தில்தான்.

ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலமாக தனி மாவட்டக் கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட காரைக்கால் வழியாக நுழைவு வரி செலுத்தியோ அல்லது திருவாரூர் வழியாகவோ தான், மாவட்டத் தலைநகரான நாகப்பட்டினத்துக்கு செல்லும் நிலை இருந்து வந்தது.

தஞ்சாவூருக்கு அடுத்ததாக வரலாறு, புவியியல், பண்பாட்டு அம்சங்கள் பலவற்றைக் கொண்ட மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உதயமாவது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும், மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments