ஈரானில் பனிச்சரிவில் சிக்கி மலையேறும் குழுவைச் சேர்ந்த 11 பேர் உயிரிழப்பு

0 802

ஈரானில் பனிச்சரிவில் சிக்கி மலையேறும் குழுவைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்தனர்.

தலைநகர் தெஹரானின் வடக்குப் பகுதியில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதன் காரணமாக அங்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், மலையேறும் குழுவைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்கள் அல்போர்ஸ் மலை வழியாகச் சென்றதாகக் கூறப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை சென்ற அவர்கள் நேற்றுவரை திரும்பாததால் அவர்களைத் தேடும் பணி நடந்தது. அப்போது பனிச்சரிவில் சிக்கி 11 உயிரிழந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மீதமுள்ளவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments