சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு போலீசார் தீவிர வாகன சோதனை... பைக் ரேசினை தடுக்கும் வகையில் அதிரடி நடவடிக்கை

0 673

புத்தாண்டு வருவதையொட்டி நள்ளிரவில் பைக் ரேஸினை தடுக்கும் வகையில் சென்னையில் 60இடங்களில் போலீசார் வாகன தணிக்கையினை செய்து வருகின்றனர்.

தமிழக அரசு கொரோனா பரவல் காரணமாக சென்னையில் மெரினா கடற்கரை , கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவைகளை வரும் 31ஆம் தேதி மற்றும் 1ஆம் தேதிகள் இயங்க அனுமதி அளிக்கவில்லை. இதனை அடுத்து பெருநகர சென்னை காவல் துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் அத்தியாவசிய தேவைகள் இன்றி யாரும் கார்கள் , மோட்டார் சைக்கிளில்  வெளியில் சுற்றுவதைத்  தடுக்கும் வகையில் கடந்த 25ஆம் தேதியில் இருந்து வரும் 1தேதி வரை சென்னையில்  60 இடங்களில் போலீசார் வாகன சோதனைகள் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து  மெரினா கடற்கரை காமராஜர் சாலை, அண்ணாசாலை , தியாகராயர்நகர் உள்ளிட்ட பல இடங்களில்  போலீசார் விடிய விடிய வாகன சோதனைகளை மேற்கொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments