சீனாவில் இருந்து இந்தியா வருவோருக்கு அனுமதி இல்லை? விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

சீனாவில் இருந்து இந்தியா வருவோருக்கு அனுமதி இல்லை? விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
சீனாவில் இருந்து வருவோருக்கு விமானத்தில்அனுமதியளிக்க வேண்டாம் என்று மத்திய அரசு விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
சீனாவில் இருந்து இந்தியா வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் வர்த்தக ரீதியாக சீனர்கள் இந்தியாவுக்கு வர மூன்றாம் உலக நாடுகள் வழியாக விமானப் போக்குவரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
வந்தே பாரதம் மற்றும் பபிள் விமான சேவைகளை இந்தியா வெளிநாடுகளுக்கு அனுமதித்துள்ள நிலையில் சீனாவில் இருந்து இதர நாடுகள் வழியாக இந்தியாவுக்கு ஏராளமான சீனர்கள் வருகின்றனர்.
இதே போன்று இங்கிருந்தும் பலர் சீனாவுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று மத்திய அரசு விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments