இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்..! ஏழு நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயமாக்கப்பட்டது

0 949
இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்..! ஏழு நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயமாக்கப்பட்டது

ங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகளுக்கு மும்பையில் புதிய கட்டுப்பாடுகளும் வழிகாட்டல்களும் அமல்படுத்தப்பட்டுள்ளன.

லண்டன் உள்ளிட்ட நகரங்களில் இருந்து மும்பைக்கு வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இதில் தொற்று அறிகுறி இல்லாதவர்கள் ஏழுநாட்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டவர்களுக்கு ஏழு நாட்கள் மருத்துவமனை சிகிச்சையும் சிகிச்சைக்குப் பின்னர் ஏழு நாட்களுக்குப் பிறகு பல்வேறு பரிசோதனைகளும் வீடுகளில் தனிமைப்படுத்துதலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகளுக்கு தனி மருத்துவமனை ஒதுக்கப்பட்டுள்ளது. தலைவர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், அரசு அதிகாரிகளுக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments