கொரோனா தடுப்பூசி போடுவதற்காக, ஆந்திரா, அசாம், குஜராத், பஞ்சாப் மாநிலங்களில் இன்று ஒத்திகை

கொரோனா தடுப்பூசி போடுவதற்காக, ஆந்திரா, அசாம், குஜராத், பஞ்சாப் மாநிலங்களில் இன்று ஒத்திகை
கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்னோட்டம் ஆந்திரா, அசாம், குஜராத், பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் இன்று நடக்கிறது.
கொரோனா தடுப்பூசியை விமான நிலையங்களில் இருந்து சம்மந்தப்பட்ட மாவட்டங்கள், மாவட்டங்களிருந்து கிராமங்கள், அங்கிருந்து சுகாதார மையங்களுக்கு எப்படி கொண்டு செல்வது என முன்னோட்டம் பார்க்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து மருந்துகளை மருத்துவமனைகளுக்கு எப்படி கொண்டு செல்வது, எப்படி பதப்படுத்தி குளிர்பதன கிடங்குகளில் வைப்பது, அதன் பிறகு எப்படி மக்களுக்கு தடுப்பூசி போடுவது என்பது குறித்து நான்கு மாநிலங்களிலும் இன்று ஒத்திகை நடத்தப்படுகிறது.
Comments