போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் கெஜ்ரிவால் இரண்டாவது முறை சந்திப்பு... புதிய வேளாண் சட்டங்களை கைவிட கைகூப்பி வேண்டுகோள்

0 624
போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் கெஜ்ரிவால் இரண்டாவது முறை சந்திப்பு... புதிய வேளாண் சட்டங்களை கைவிட கைகூப்பி வேண்டுகோள்

டெல்லி-ஹரியானா எல்லையான சிங்கூவில் கடந்த ஒருமாதத்திற்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சந்தித்தார்.

அவருடன் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோரும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்காகவே போராடி வருவதாகவும், அவர்களுக்கு எதிரான சட்டங்களை ரத்து செய்யும் படியும் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments