"தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை இன்று உதயம்" முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்

0 2006
"தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை இன்று உதயம்" முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்

மிழகத்தின் 38-ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் இன்று தொடங்கிவைக்கிறார்.

கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர், நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தில் இருந்த 4 வருவாய் வட்டங்களை உள்ளடக்கிய மயிலாடுதுறை புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.

இதற்கான அரசாணை வெளியிடப்பட்டதும், மாவட்ட உருவாக்க சிறப்பு அலுவலராக லலிதா, காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா ஆகியோர் நியமிக்கப்பட்டு, எல்லை வரையறை பணிகள் நடைபெற்று வந்தன. வணிகவரித் துறை அலுவலகத்தில் தற்காலிக மாவட்ட ஆட்சியரகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

மன்னம்பந்தலை அடுத்த பால்பண்ணை பகுதியில் நிரந்தர மாவட்ட நிர்வாகக் கட்டடங்களை கட்டுவதற்கு தருமபுரம் ஆதீனம் நிலம் வழங்கியுள்ளார். இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தை முதலமைச்சர் இன்று காணொலி மூலம் தொடங்கிவைக்கிறார். வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments