கடும் குளிரிலும் 32-ஆவது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியின் எல்லையில், 32-ஆவது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியின் எல்லையில், 32-ஆவது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசுக்கும் விவசாயிகள் சங்கங்களுக்கும் இடையே பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றன.
இந்நிலையில் மத்திய அரசின் அழைப்பை ஏற்று விவசாய சங்கங்கள் வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டுள்ளன.
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவது, அடிப்படை ஆதார விலையை உறுதிசெய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் சங்கங்கள் மீண்டும் பேச்சுவார்த்தையில் வலியுறுத்த உள்ளன.
Comments