ஹெலிகாப்டர் மூலம் வந்த திருச்சி கமல்ஹாசன்.. மூன்றாம் கட்ட பிரச்சாரம் தொடக்கம்..

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ஹெலிகாப்டரில் சென்று, திருச்சியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ஹெலிகாப்டரில் சென்று, திருச்சியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
விமானம் மூலம் சென்னையில் இருந்து மதுரை சென்றடைந்த கமல்ஹாசன், பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில், தனது மகள் அக்சராஹாசனுடன், திருச்சிக்கு வந்தார்.
3- வது கட்ட தேர்தல் பிரசாரத்தை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தொடங்கிய கமல்ஹாசன், பின்னர், சிறு, குறு மற்றும் தொழில் முனைவோர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சத்திரம் பேருந்து நிலையம், சிந்தாமணி அண்ணாசிலை உள்ளிட்ட பல இடங்களில் திறந்த வேனில் நின்று கமல்ஹாசன் பிரசாரம் செய்தார்.
Comments