தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு கோவில்களில் சனிப்பெயர்ச்சி கோலாகலம்..

0 2761
தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனிபகவான் இடம்பெயரும் நிகழ்வு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு கோவில்களில் கோலாகலமாக நடைபெற்றது.

தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனிபகவான் இடம்பெயரும் நிகழ்வு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு கோவில்களில் கோலாகலமாக நடைபெற்றது. 

புதுச்சேரி காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் அதிகாலை 5.22 மணிக்கு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசித்தார். விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். புதுச்சேரி அருகேயுள்ள மொரட்டாண்டி சனிபகவான் ஆலயத்திலும் 27 அடி உயர சனிபகவானுக்கு சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்றன.

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ் வரர் கோவிலில் அதிகாலை 4.49 மணிக்கு உத்திராடம் நட்சத்திரம் 2-ம் பாதத்தில் சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்தார்.

தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் ஆலயத்தில், சனிபெயர்ச்சியை முன்னிட்டு சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது.

கும்பகோணம் அருகே திருநாரையூர் ராமநாத சுவாமி ஆலயத்தில் சனிபெயர்ச்சியை யொட்டி மங்கள சனீஸ்வரருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், உள்ளிட்ட பலவகை மங்கல பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஏரிகுப்பம் பகுதியில் உள்ள எந்திர வடிவிலான சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபஆராதனை நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் திருக்கொடியலூர் அகத்தீஸ்வரர் ஆலயத்தில் மங்கள சனீஸ்வரருக்கு சிறப்பு பரிகார யாகங்கள் நடைபெற்றன.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோவில் திருக்கரம்பனூரில் அமைந்துள்ள உத்தமர் கோவிலில் சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

சேலம் சின்ன கடை வீதி பகுதியில் உள்ள சனிபகவான் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சியை ஒட்டி சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

கள்ளகுறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கீழையூரில் உள்ள வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments