பெண் குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்

பெண் குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
பெண் குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையும், கவனமும் செலுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால், பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தனி நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கையொன்றில் அவர் உறுதி அளித்துள்ளார்.
சென்னை வண்ணாரப் பேட்டை 13 வயது சிறுமி, அயனாவரம் 11 வயது சிறுமி உள்ளிட் டோருக்கு நிகழ்ந்துள்ள பாதிப்புகளை பட்டியலிட்டு உள்ள மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறையிடம் தைரியமாகப் புகார் கொடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் ரகசியப் பிரிவு ஒன்று மாநில அளவில் உருவாக்கப்படும் என்றும் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Comments