நடிகர் ரஜினிகாந்த் இன்று டிஸ்சார்ஜ்

0 1687
நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ்

ரஜினிகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதையடுத்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட இருப்பதாக ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், ரஜினிகாந்துக்கு ரத்த அழுத்தம் சீரான நிலைக்கு வந்துள்ளதாகவும், தற்போது அவர் நன்றாக உணர்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

1 வார காலத்துக்கு ரத்த அழுத்த அளவு கண்காணித்து, படுக்கையில் முழு ஒய்வெடுக்கவும், உடல் அசைவு தொடர்பான பணிகளை குறைவாக மேற்கொள்ளவும், மன அழுத்தத்தை தவிர்க்கவும் கேட்டு கொள்ளப்பட்டிருப்பதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று ஆபத்தை அதிகரிக்கும் செயல்களை தவிர்க்கும்படியும் ரஜினிக்கு அறிவுரை அளிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments