இங்கிலாந்தில் இருந்து மதுரை திரும்பிய 4 பேர் மாயம் - சுகாதாரத்துறை அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் தேடும் பணிகள் தீவிரம்

இங்கிலாந்தில் இருந்து மதுரை திரும்பிய 4 பேர் மாயம் - சுகாதாரத்துறை அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் தேடும் பணிகள் தீவிரம்
இங்கிலாந்தில் இருந்து மதுரை திரும்பிய 4 பேரை காவல்துறையினர் உதவியுடன் சுகாதாரத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
இங்கிலாந்தில், உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதால் அங்கிருந்து மதுரை திரும்பிய 88 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ள அதிகாரிகள் முடிவெடுத்தனர்.
அவர்களில், 84 பேர் அடையாளம் காணப்பட்டு, பரிசோதனை மேற்கொண்டதில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், மீதமுள்ள நான்கு பேரின் வீடுகள் பூட்டப்பட்டிருந்ததுடன், அவர்களின் செல்போன்களும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால், காவல்துறை உதவியுடன், அதிகாரிகள் அவர்களைத் தேடி வருகின்றனர்.
Comments