விலை உயர்ந்த ஆடம்பர உணவாக மாறிய அமெரிக்காவின் மலிவான சிப்பி உணவு!

0 18086
விலை உயர்ந்த ஆடம்பர உணவாக மாறிய அமெரிக்காவின் மலிவான சிப்பி உணவு!

ஒரு காலத்தில் அமெரிக்காவின் மது விடுதிகளில் இலவசமாக வழங்கப்பட்ட சிப்பி உணவு இன்று விலை உயர்ந்த ஆடம்பர உணவாகியுள்ளது.

சுண்ணாம்புச் சிப்பிகளால் ஆன ஓடுகளுக்குள் உள்ள மெல்லுடலி சிறந்த உணவாகப் பயன்படுகிறது. இருநூறாண்டுகளுக்கு முன் சிப்பி உணவு அமெரிக்காவின் மது விடுதிகளில் இலவசமாக இணை உணவாக வழங்கப்பட்டது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிப்பி உணவு விற்பனைப் பெருமளவு அதிகரித்தது. லண்டன், பாரிஸ், நியூயார்க் நகரங்களில் தெருவோரக் கடைகளில் மிகக் குறைந்த விலைக்கு விற்கப்பட்ட உணவாக இருந்தது.

1860ஆம் ஆண்டில் விட்ஸ்டேபிள் என்னும் ஊரில் இருந்து ஆண்டுக்கு 5 கோடி டன் சிப்பிகள் லண்டனுக்கு அனுப்பப்பட்டன. 1900ஆவது ஆண்டில் நியூயார்க்கில் மட்டும் நாள்தோறும் 10 லட்சம் சிப்பிகள் உணவாகப் பயன்படுத்தப்பட்டன.

ஒரு சிப்பி முழு வளர்ச்சியடைய இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆகின்றன. சிப்பி உணவை மக்கள் விரும்பி உண்பதால் இப்போது உலகின் பல நாடுகளிலும் விலை உயர்ந்த ஆடம்பர உணவாக விற்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments