சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியது அதிமுக

0 4159

தொண்டர்களும் முதலமைச்சராகக் கூடிய அளவுக்கு ஜனநாயகம் கொண்ட ஒரே கட்சி அதிமுக தான் எனச் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத் தொடக்கக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  

சட்டமன்றத் தேர்தலுக்கான அ.தி.மு.கவின் முதல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் சென்னை இராயப்பேட்டை உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் கூட்டத்தைத் தொடங்கி வைத்தனர். கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சில புல்லுருவிகள் கட்சியை உடைக்க முயன்றதாகவும், தொண்டர்கள், நிர்வாகிகளின் துணையுடன் அது முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தொண்டர்களும் முதலமைச்சராக வாய்ப்புள்ள ஒரே கட்சி அதிமுக தான் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், காவிரி டெல்டாவில் ஹைட்ரோகார்பன் திட்டம் கொண்டுவர முதலில் கையெழுத்திட்ட திமுக தற்போது அரசியல் செய்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

 

அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, எந்தக் கட்சி கூட்டணிக்கு வந்தாலும் அதிமுக தலைமையில்தான் ஆட்சி என்றும், கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments