தென்தமிழக கடலோர மாவட்டங்களில் நாளை மிதமான மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நாளை தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
29 மற்றும் 30ம் தேதிகளில் தென் தமிழகம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களின் ஒருசில இடங்களிலும், தெற்கு உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், வடக்கு உள் மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
30 மற்றும் 31ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
Comments