கடல்வளங்களை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் விற்றுவிட்டதாக மீனவர்கள் குற்றச்சாட்டு

0 1237

பிரெக்சிட் உடன்படிக்கையால் பிரிட்டனின் மீன்பிடி உரிமைகளை ஐரோப்பிய ஒன்றியத்துக்குப் பிரதமர் போரிஸ் ஜான்சன் விற்றுவிட்டதாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பிரெக்சிட் உடன்படிக்கையின்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான மீன்வளக் கொள்கையில் இருந்து டிசம்பர் 31ஆம் நாள் பிரிட்டன் வெளியேறுகிறது.

வெளியேற்றத்துக்குப் பின் பிரிட்டன் கடற்பரப்பில் உள்ள மீன்பிடி உரிமைகள் குறித்த புதிய உடன்பாட்டில் பிரதமர் போரிஸ் ஜான்சன் கையொப்பமிட்டுள்ளார். அடுத்த ஐந்தரை ஆண்டுகளுக்கு நடைமுறையில் இந்த உடன்பாட்டின் படி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த மீன்பிடி படகுகள் பிரிட்டன் கடற்பரப்பில் மீன்பிடிக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது.

இதனால் பிரிட்டன் கடல் வளங்களை ஐரோப்பிய ஒன்றியத்துக்குப் பிரதமர் விற்றுவிட்டதாக மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments