தமிழகத்தை 30 ஆண்டுகளாக ஆண்ட ஒரே கட்சி அதிமுக; அதிமுகவில் விசுவாசமாக இருப்பவர்களுக்கு ஏதாவது ஒரு பதவி நிச்சயம்- முதலமைச்சர்

அதிமுக பிரச்சார பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரை
தமிழகத்தை 30 ஆண்டுகளாக ஆண்ட ஒரே கட்சி அதிமுக
அதிமுக ஆட்சியில் தமிழகம் அனைத்து துறையிலும் முதலிடத்தில் உள்ளது
அதிமுக ஆட்சியை விமர்சிப்பவர்கள், அவர்களது வீட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கின்றனர்
எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் நாட்டு மக்களுக்கான ஆட்சியைத் தந்தவர்கள்
அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள்
பல்வேறு சோதனைகளை சந்தித்து வளர்ந்த இயக்கம் அதிமுக
சில புல்லுருவிகள் அதிமுகவை உடைக்க நினைத்தனர் - அவர்களது முயற்சி தவிடுபொடியாக்கப்பட்டது
ஒற்றுமையின் மூலம் எதையும் வெல்லும் சக்தி அதிமுகவிற்கு உள்ளது
இந்தியாவிலேயே தொண்டர் முதலமைச்சராக வரக்கூடிய ஒரே கட்சி அதிமுக தான்
எதிரிகளும் உச்சரிக்கும் பெயராக எம்ஜிஆர் பெயர் உள்ளது
பிரிந்த பின் மீண்டும் இணைந்த ஒரே இயக்கம் அதிமுக தான்
அதிமுகவில் விசுவாசமாக இருப்பவர்களுக்கு ஏதாவது ஒரு பதவி நிச்சயம்
அதிமுக அரசின் நலத் திட்டங்களை பட்டியலிட்டு முதலமைச்சர் உரை
நீர்மேலாண்மையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது
இந்தியாவிலேயே உயர்கல்விக்கு செல்வோர் விகிதம் தமிழகத்தில்தான் அதிகம்
சென்னைக்கு புதிய குடிநீர் ஆதாரமாக கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை திட்டம்
சென்னைக்கு குடிநீர் ஆதாரமாகத் திகழும் ஏரிகள் நிரம்புகின்றன
சென்னைவாழ் மக்களுக்கு அடிப்படை தேவைகளை நிறைவு செய்கிற அரசு அதிமுக அரசு
சென்னை மேயராக இருந்தபோதும், துணை முதலமைச்சராக இருந்தபோதும் மு.க.ஸ்டாலின் ஏதும் செய்யவில்லை
மு.க.ஸ்டாலின் கிராமங்களில் ஏற்கெனவே வாங்கிய மனுக்களின் நிலை என்ன?
துறைவாரியாக தேசிய விருதுகளை அதிமுக அரசு பெற்றுள்ளது
இந்தியாவிலேயே அதிக தேசிய விருதுகளை பெற்ற முதல் மாநிலம் தமிழகம்
2.06 கோடி குடும்ப அட்டைகளுக்கு ரூ.2500 வழங்கப்படும்
டெண்டர் ரத்து செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆனது கூட தெரியாமல் மு.க.ஸ்டாலின் ஊழல் புகார் கூறுகிறார்
Comments