”பைசர் கொரோனா தடுப்பூசி பிரான்ஸ் வந்தடைந்தது” தடுப்பூசி போடுவதில் முதியோருக்கு முன்னுரிமை கொடுக்க முடிவு

0 2080
”பைசர் கொரோனா தடுப்பூசி பிரான்ஸ் வந்தடைந்தது” தடுப்பூசி போடுவதில் முதியோருக்கு முன்னுரிமை கொடுக்க முடிவு

பிரான்சுக்கு வந்தடைந்த பைசர் கொரோனா தடுப்பு மருந்து, பொதுமக்களுக்கு போடுவதற்காக வேன்களில் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் இன்று முதல் பொதுமக்களுக்கு பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அப்போது முதியோருக்கு முதல் முன்னுரிமை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் பைசர்- ஜெர்மனியின் பயோ என்டெக் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட மருந்து, பெல்ஜியம் நாட்டிலிருந்து சுமார் 20 ஆயிரம் டோஸ்கள் மருந்து பெட்டிகளில் வைத்து பிரான்சுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.

அந்த மருந்து பெட்டிகள் பாரீசில் உள்ள விநியோக மையத்தில் பரிசோதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments