உள்ளுர் அணிகளுக்கு இடையே நடந்த கால்பந்து போட்டி... மைதானத்தில் விளையாட்டுக் காட்டிய நாய்

0 777

பொலிவியாவில் நடந்த கால்பந்துப் போட்டியின் நடுவே நாய் ஒன்று குறுக்கே புகுந்து செய்த குறும்பினால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

போட்டோஸி என்ற இடத்தில் உள்ளூர் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. அப்போது பிய்ந்து போன ஷூ ஒன்றைத் தூக்கிக் கொண்டு மைதானத்திற்குள் நுழைந்தது குறும்புக்கார நாய்.

வீரர்கள் ஒருபுறம் ஓடிக் கொண்டிருக்க, அதனைக் கண்டு கொள்ளாமல் ஷூவை மேலும் கடித்துக் குதறிக் கொண்டிருந்த நாயால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து வீரர்கள் நாயுடன் கொஞ்சியும், கெஞ்சியும் அதனை வெளியேற்றினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments