மாஸ்கோவில் புத்தாண்டை வரவேற்க கோலாகல ஏற்பாடுகள்... புகழ்பெற்ற இடங்களில் வண்ண விளக்குகளால் அலங்காரம்

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் வருகிற புத்தாண்டை வரவேற்கும் விதமாக பிரபல கட்டிடங்களில் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு கோலாகலமாக காட்சி அளித்தன.
அங்கு கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக இருந்தாலும் மக்கள் அதைப்பற்றி கவலைப்படாமல் சுற்றுலா இடங்களை கண்டுகளித்தனர். புகழ் பெற்ற இடங்களான செஞ்சதுக்கம், கிரெம்ளின் மாளிகை மற்றும் உலக புகழ் பெற்ற Bolshoi திரை அரங்கம் ஆகியவை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
இதனைக் கண்டுகளித்த மக்கள் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாது அதன் முன்பாக நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
Comments