உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு அஸ்ஸாமில் பாஜக பலம் பெறும் - அமைச்சர் அமித்ஷா

ஆயுஷ்மன் மருத்துவக் காப்பீடு திட்டம் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் முதன் முதலாக ஜம்மு காஷ்மீரில் செயல்படுத்தப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அஸ்ஸாமில் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் அங்கு மருத்துவக் கல்லூரி, சட்டக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு அஸ்ஸாமில் பாஜக பலம் பெறும் என்று கூறிய அமித் ஷா ,அஸ்ஸாமின் கிராமங்கள் தோறும் பக்தி இயக்கம் பரவவேண்டும் என்றும் இந்த இயக்கம் ஆயுதம் தாங்கிய போராட்டங்களை வென்று விடும் என்றும் கூறினார்.
Comments