100வது விவசாயிகள் ரயில் சேவை... நாளை மாலை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி

100ஆவது விவசாயிகள் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை காணொலி காட்சி மூலம் துவக்கி வைக்கிறார்.
மகாராஷ்டிரத்தில் உள்ள சங்கோலாவில் இருந்து மேற்கு வங்கத்தில் உள்ள ஷாலிமார் வரை இந்த ரயில் செல்கிறது. காய்கறிகளையும், பழங்களையும் எடுத்துச் செல்லும் வகையில் பல பொருள் சேவையாக இது விளங்கும்.
பொருள்கள் எந்த அளவில் இருந்தாலும், அவற்றை இந்த வழித்தடத்தில் உள்ள அனைத்து நிறுத்தங்களிலும் ஏற்றலாம், இறக்கலாம். பழங்கள் மற்றும் காய்கறிகளின் போக்குவரத்துக்கு 50 சதவீத மானியத்தை இந்திய அரசு வழங்குகிறது.
Comments