இங்கிலாந்தில் இருந்து தெலங்கானா வந்த 279 பயணிகள் சென்றது எங்கே? தடுமாறும் சுகாதாரத்துறை அதிகாரிகள்

0 833

பிரிட்டனில் இருந்து தெலுங்கானா வந்த 279 பேரை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவுவதை அடுத்து,  அந்நாட்டில் இருந்து தாயகம் திரும்பியோரை பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதில் இதுவரை 119 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரிட்டனில் இருந்து  தெலுங்கானா வந்த 279 பயணிகள் எங்கு இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

அவர்கள் தவறான தொலைபேசி எண்கள் மற்றும் விலாசங்களை கொடுத்திருப்பதாக காவல்துறை கூறி உள்ளது. இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments