ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி... இந்திய அணி நிதானமான ஆட்டம்

0 2337

மெல்போர்னில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்கிசில் 3  விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையே 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 195 ரன்கள் எடுத்தது.

இதனை தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்சை ஆடி வருகிறது. 2ஆம் நாளான இன்று இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்துள்ளது. அகர்வால் ரன் எதுவும் எடுக்காமலும், சப்மான் கில் 45 ரன்கள்,  புஜாரா 14 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர்.

ரஹானே 10 ரன்களுடனும், ஹனுமான் விஹாரி 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய தரப்பில் Mitchell Starc ஒரு விக்கெட்டையும், பாட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments