காளைகளுக்கு ஜல்லிக்கட்டுப் பயிற்சி அளிக்கும் 4 வயது சிறுமி
மதுரை அருகே 4 வயதே ஆன சிறுமி, அச்சமின்றி, காளைகளுக்கு ஜல்லிக்கட்டுப் பயிற்சி அளித்து வருகிறார்.
மதுரை அருகே 4 வயதே ஆன சிறுமி, அச்சமின்றி, காளைகளுக்கு ஜல்லிக்கட்டுப் பயிற்சி அளித்து வருகிறார்.
வாடிப்பட்டியைச் சேர்ந்த வினோத் என்பவர் “புகழ், தளபதி” என இரண்டு ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். அவருடன், அவரது நான்கு வயது மகளாக யுவஸ்ரீ அபியும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்காக காளைகளுக்கு மண் குத்தும் பயிற்சி, நீச்சல் பயிற்சி உள்ளிட்டவற்றை அளிக்கிறார்.
பார்த்தாலே பயத்தை ஊட்டும் அந்தக் காளைகளோடு, சிறுமி எவ்வித அச்சமும் இன்றி கொஞ்சிக் குலாவுகிறார்.
Comments