நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் முதலமைச்சர் 3 நாட்கள் பரப்புரை

0 3374
நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 3 நாள் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக, அதிமுக அறிவித்துள்ளது.

நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 3 நாள் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக, அதிமுக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வருகிற 29ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று, நாமக்கல், இராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்தி வேலூர் பகுதிகளில் பரப்புரை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

30ஆம் தேதி சேந்தமங்கலத்தில் பரப்புரையைத் தொடங்கும் முதலமைச்சர், பின்னர், திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட துறையூர், முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

31ஆம் தேதி, திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் வழிபாடு நடத்தி தனது பரப்புரையை தொடங்கும் முதலமைச்சர், திருவெறும்பூர், மணப்பாறை, திருச்சி மாநகர், மற்றும் புறநகர் பகுதிகளில், பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக, அதிமுக அறிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments