லண்டனில் இருந்து தமிழகம் வந்த மேலும் 5 பேர் மூலம் 4 பேருக்கு கொரோனா

0 9518
இங்கிலாந்தில் இருந்து தமிழகம் திரும்பிய மேலும் 5 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்து 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் இருந்து தமிழகம் திரும்பிய மேலும் 5 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்து 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை விடுத்துள்ள செய்தி குறிப்பில், லண்டனில் இருந்து வந்த 5 பேருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இப்போது மேலும் 5 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

லண்டன் பயணிகளுடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும்,மேலும் 44 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியது உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவம்பர் 25 முதல் டிசம்பர் 21 ஆம் தேதி வரை லண்டனில் இருந்து தமிழகம் திரும்பிய 2300 பேரில் 1362 பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளதாகவும், மற்றவர்களுக்கும் விரைவில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments