பாகிஸ்தானுக்கு டிரான்களை விற்கும் சீனா.! இந்தியாவுடன் உளவியல் போர்?

0 16434
லடாக் எல்லையில் அத்துமீறி பதற்றத்தை ஏற்படுத்தும் சீனா, இந்தியா மீது உளவியல் ரீதியிலான போரைத் தொடுக்க தயாராகி வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது.

லடாக் எல்லையில் அத்துமீறி பதற்றத்தை ஏற்படுத்தும் சீனா, இந்தியா மீது உளவியல் ரீதியிலான போரைத் தொடுக்க தயாராகி வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதை முன்கூட்டியே உணர்ந்திருக்கும் இந்தியா தனது துருப்புகளை அதற்கும்  தயார்படுத்தியுள்ளது. 

லடாக் எல்லையில் அத்துமீறும் சீனா, எல்லையில் நமக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துவரும் பாகிஸ்தானுக்கு, 50 ஆயுதம் தாங்கி டிரோன்களை விற்றுள்ளதாக, செய்திகள் வெளியாகியுள்ளன. விங் லூங்-2 (Wing Loong II) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆளில்லா ஆயுதம் தாங்கி விமானங்கள், ரிமோட் கன்ட்ரோல் மூலமாகவும், தானியங்கி நுட்பத்தின் அடிப்படையில் இயங்க வல்லவை.

32 மணி நேரம் தொடர்ந்து பறக்கும் வல்லமை கொண்ட இந்த சீனாவின் ஆளில்லா ஆயுதம் தாங்கி விமானங்கள், 32 ஆயிரத்து 500 அடி உயரம் வரையில் பறக்கும் ஆற்றல் பெற்றது. மணிக்கு 370 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து செல்லும் திறன்கொண்ட இந்த ஆளில்லா டிரோன்கள், மணிக்கு 150 கிலோ மீட்டர் என்ற நிலைத்த வேகத்தில், துல்லியமாக கண்காணித்து தாக்கும் ஆற்றல் பெற்றவை.

ரேடார்களின் கண்களிலிருந்து இலகுவாக தப்பிக்கும் ஆற்றல் பெற்றதாக விளங்கும் இந்த டிரோன்கள், தன்னகத்தே உடைய 12 வான் எதிர்ப்பு ஏவுகணைகள் மூலம் துல்லியத் தாக்குதலை நிகழ்த்த முடியும்.

இவ்வாறான, அதிக திறன்படைத்த ஆளில்லா டிரோன்கள் மூலம், திட்டமிட்ட தாக்குதல் சாத்தியம் என்பதால், இது, அண்டை நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறக் கூடியவை என சீனாவின் பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் கணிப்பதாக, சொல்லப்படுகிறது.

இவ்வாறான அச்சுறுத்தல் மூலம், அண்டை நாடுகளில், மலைச்சிகரங்கள் உள்ளிட்ட உயரமான எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் இராணுவ வீரர்களின் மன உறுதியை குலைத்து உளவியல் போரை தொடுக்க வல்லதாக திகழும் என்கின்றனர்.

இதையெல்லாம் நன்றாகவே கணித்து உணர்ந்திருக்கும் இந்திய ராணுவம், தனது துருப்புகளுக்கு, வெறும் ஆயுத பயிற்சி மட்டுமின்றி, உளவியல் பயிற்சிகள், யோகா உள்ளிட்ட தியானக் கலைகள், தற்காப்பு கலை பயிற்சிகளை தொடர்ந்து அளித்து வருகிறது. பாகிஸ்தானுக்கு சீனா வழங்கியுள்ள ஆயுதம் தாங்கி டிரோன்கள் போன்ற ஆளில்லா தாக்குதல் விமானங்கள், தற்போதைய நிலையில் இந்தியாவிடம் இல்லை எனச் சொல்லப்படுகிறது.

இருப்பினும், அமெரிக்காவிடமிருந்தும், மற்றும் இஸ்ரேலின் ஆயுதம் தாங்கி டிரோன்களான ஹெரான் (Heron) ஆளில்லா தாக்குதல் விமானங்களை கொள்முதல் செய்யும் பணியில், இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. இதன்மூலம், சீனாவின் உளவியல் ரீதியிலான தாக்குதலை முறியடிக்க, இந்தியா முன்கூட்டியே தயாராகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments