காஷ்மீர் எல்லையில் ராணுவத்தினருக்கான பதுங்கு குழிகள் - பிரதமர் மோடி அறிவிப்பு

0 2337
காஷ்மீர் எல்லையில் ராணுவத்தினருக்கான பதுங்கு குழிகள் அமைக்கப்படும்என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் எல்லையில் ராணுவத்தினருக்கான பதுங்கு குழிகள் அமைக்கப்படும்என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தலில் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் வாக்களித்துள்ளனர் என்றார்.

மகாத்மா காந்தியின் கிராம சுவராஜ்யம் என்ற கொள்கையை ஜம்மு காஷ்மீர் மக்கள் வென்றெடுத்துள்ளதாக அவர் கூறினார்.  பஞ்சாயத்து தேர்தலை நடத்தி மக்களுக்கு நல்ல செய்ய மறுத்ததால் ஜம்மு காஷ்மீர் அரசில் அங்கம் வகித்த பா.ஜ.க. அதனை விட்டு விலகவும் செய்ததாக அவர் கூறினார்.

உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் கூட புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அங்குள்ள அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று மோடி குற்றம் சாட்டினார்.

ஆனால் அதே கட்சிக்காரர்கள் தான் தமக்கு ஜனநாயகம் குறித்து பாடம் எடுக்க முனைவதாக அவர் குறிப்பிட்டார்.

எல்லையில் தொடரும் தாக்குதல் குறித்து அரசு கவலை கொண்டுள்ளது என்ற மோடி, சம்பா, பூஞ்ச், கதுவா எல்லைகளில் ராணுவத்தினருக்கான பதுங்கு குழிகளை அமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெறும் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments