எல்லையில் உஷார் நிலை... எதற்கும் தயாராக ராணுவம்....

0 4275
லடாக்கை போலவே அருணாச்சல பிரதேச எல்லையிலும் இந்திய ராணுவம் முழு வீச்சில் தயார் நிலையில் உள்ளது. அங்கு சீனா ஊடுருவ முயன்றால் பயங்கர விளைவுகளை சந்திக்கும் என்றும் இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

லடாக்கை போலவே அருணாச்சல பிரதேச எல்லையிலும் இந்திய ராணுவம் முழு வீச்சில் தயார் நிலையில் உள்ளது. அங்கு சீனா ஊடுருவ முயன்றால் பயங்கர விளைவுகளை சந்திக்கும் என்றும் இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறல் முறியடிக்கப்பட்டதை அடுத்து, அந்நாட்டு உடனான எல்லை நெடுகிலும் பாதுகாப்பை இந்திய அரசு பலப்படுத்தி உள்ளது. இதில் அருணாச்சல பிரதேச எல்லையில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

1962 ஆம் ஆண்டு போரின் போது அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பிராந்தியத்தில் தான் சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் ஊடுருவியது. இப்போது அது போன்ற ஒரு நிலை வருவதை தடுக்க இந்திய ராணுவம் முன் எப்போது இல்லாத அளவுக்கு பெரும் பாதுகாப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது.

இமயமலையின் 15,500 அடி உயரத்தில் உள்ள அங்கு, ராணுவ வீரர்கள் இரவு பகலாக காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் கடும் பனிக்காற்று நடுவிலும் இந்திய ராணுவம் எல்லையை காக்கும் பணியை கண்ணும், கருத்துமாக மேற்கொண்டுள்ளது.

உடலை துளைக்கும் கடும் பனியை தாங்க வல்ல ஆடைகளையும், பனியை ஊடுருவி பார்க்க துணை நிற்கும் விசேச கண்ணாடிகளை அணிந்தும் எல்லை காக்கும் பனியில் இந்தோ, திபெத் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இப்போது இந்திய எல்லையின் கடைசி முனை வரை சாலை அமைக்கப்பட்டுள்ளதால், படையினர் எல்லைக்கு விரைவது எளிதாகி உள்ளதாக இந்தோ திபேத் படையின் 55 வது படை பிரிவின் கமாண்டர் ஐ.பி.ஜா தெரிவித்துள்ளார்.

மேலும் மலை சிகரங்களில் காவலில் ஈடுபட்டுள்ள வீர ர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பனி எருதுகளின் மூலம் கொண்டு கொடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு எருது 90 கிலோ எடையை தாங்கி கடும் பனிக்கு இடையிலும் சளைக்காமல் நடைபோடும் என்பதால், பொருள்கள் வினியோகம் எளிதாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

லடாக் எல்லையில் இந்த ஆண்டின் தொடக்க மாதங்களில் சீனா படைக்கு எதிராக இந்திய படையினர் கடும் மோதலில் ஈடுபட்டதாக அவர் கூறினார். இதில் சீனாவுக்கு தக்க பாடத்தை இந்திய துருப்புகள் கற்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதே போன்ற ஒரு நிலை அருணாச்சல பிரதேச எல்லையில் வந்தால், சீனா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடுமென அவர் எச்சரித்தார்.

அருணாச்சல பிரதேச எல்லை நெடுகிலும் இந்திய ராணுவம் பனி பொழிவுக்கு இடையிலும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது என்றும், நாட்டின் எல்லையை காப்பதில் ராணுவம் ஒரு போதும் பின்வாங்காது என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments