சவூதி அரேபியா பட்டத்து இளவரசருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

சவூதி அரேபிய பட்டத்து இளவரசருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
சவூதி அரேபிய பட்டத்து இளவரசருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் இதுவரை 3 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் இதுவரை 6 ஆயிரத்து 168 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியை நாட்டு மக்களுக்கும் போடும் திட்டத்தை சவூதி அரேபியா அரசு அமல்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு ரியாத்தில் வைத்து முதல்கட்ட தடுப்பூசி போடப்பட்டது.
Comments