எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளரா..? வானதி சீனிவாசன் பதில்

0 5323
எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளரா..? வானதி சீனிவாசன் பதில்

தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதில் முரண்பாடுகள் எதுவும் இல்லை எனவும் கூட்டணி கட்சிகளை அழைத்து அதிமுக ஆலோசனை கூட்டம் நடத்தியபின் பாஜக தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என்றும் வானதி சீனிவாசன் கூறினார். பாஜகவில் பெண் உறுப்பினர்கள் இணையும் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.

விழாவில் பங்கேற்று பேசிய பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும்
விவசாயிகளுக்கு ஆதரவாகவும் திமுக போராட்டங்களை நடத்தி வருவதுடன் இச்சட்டம் குறித்து தவறான பொய்யுரைகளை கூறிவருகிறது.

விவசாயிகளின் நலனே பிரதானம் என கூறி வரும் ஸ்டாலின் மற்றும் திமுக தலைவர்கள் தமிழக கிராமப்புற விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் வகையில் என்ன உதவிகளை செய்திருக்கிறார்? என கேள்வி எழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments