புதுவகை கொரோனா பரவலை தடுப்பது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

0 1046
புதுவகை கொரோனா பரவலை தடுப்பது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

இங்கிலாந்தில் இருந்து பரவும் புதுவகை கொரோனாவை  தடுப்பது மற்றும்  ஆன்லைன் பட்டா வழங்கும் திட்டம்  உள்ளிட்டவை குறித்து  அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை மேற்கொண்டார். 

சென்னையிலுள்ள தலைமை செயலகத்தில் இருந்தபடி இன்று அனைத்து  மாவட்ட  ஆட்சியர்களுடன் காணொலி  மூலம் அவர் ஆலோசனை நடத்தினார். 

கூட்டத்தில், புதுவகை கொரோனாவை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள், பரிசோதனை அதிகரிப்பது குறித்தும், ஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்துதல், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு காப்பீடு திட்டம் வழங்குதல்,  கிராமப்புறம் மற்றும் பழங்குடியின மக்களுக்கான வீடு கட்டும் திட்டம்  உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments