தென் தமிழகக் கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 28 முதல் மழை பெய்ய வாய்ப்பு

0 31514

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக டிசம்பர் 28 முதல் தென் தமிழகக் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்குப் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனக் குறிப்பிட்டுள்ளது. டிசம்பர் 28ஆம் நாள் தென் தமிழகக் கடலோர மாவட்டங்களிலும் நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

டிசம்பர் 29, 30 ஆகிய நாட்களில் தென் தமிழகம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments