பத்திரிகையாளர் டேனியல் பியர்ல்லை கொலை செய்த பயங்கரவாதி ஓமர் சயீத்தை விடுவிக்கக் கூடாது.. பாகிஸ்தானை எச்சரிக்கும் அமெரிக்கா

0 1659
வால்ஸ்டீரிட் ஜர்னல் (wall street journal) பத்திரிகையாளர் டேனியல் பியர்ல்லை கொலை செய்த வழக்கில் கைதான பயங்கரவாதி ஓமர் சயீத்தை விடுவிக்கக் கூடாது என்று பாகிஸ்தானை அமெரிக்கா எச்சரித்துள்ளது.

வால்ஸ்டீரிட் ஜர்னல் (wall street journal) பத்திரிகையாளர் டேனியல் பியர்ல்லை கொலை செய்த வழக்கில் கைதான பயங்கரவாதி ஓமர் சயீத்தை விடுவிக்கக் கூடாது என்று பாகிஸ்தானை அமெரிக்கா எச்சரித்துள்ளது.

2002ம் ஆண்டில் நடைபெற்ற   கொலை தொடர்பான வழக்கில் ஓமர் சயீது கைது செய்யப்பட்டு 18 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்தது. அண்மையில் சிந்து உயர்நீதிமன்றம்  பிறப்பித்த தீர்ப்பில் அவரை   விடுவிக்க  உத்தரவிட்டது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ஓமர் சயீதை விடுவிக்கும்படி நீதிமன்றம் தீர்ப்பு பிறப்பித்திருப்பது குறித்த செய்திகள்  கவலை தருவதாகவும், இந்த விவகாரத்தை தங்கள் நாடு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments