கணவர் உயிரிழந்த தகவல் கேட்டதும் நொடியில் உயிர் விட்ட மனைவி.. வாழ்க்கையில் மட்டுமல்ல மரணத்திலும் இணை பிரியாமல் உயிரிழந்த தம்பதி

0 19500
கணவர் உயிரிழந்த தகவல் கேட்டதும் நொடியில் மனைவி உயிர் விட்ட சம்பவம் சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் புதிய அண்ணாநகரில் நிகழ்ந்துள்ளது.

கணவர் உயிரிழந்த தகவல் கேட்டதும் நொடியில் மனைவி உயிர் விட்ட  சம்பவம் சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் புதிய அண்ணாநகரில் நிகழ்ந்துள்ளது.

இங்கு ஏரியில் மீன்பிடித்து வாழ்ந்து வந்த 85 வயது ஏகாம்பரம் என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.  பகல் 12.30 மணிக்கு இறந்த தந்தையின் மரணச் செய்தியை அவரது மகன் பாலன்,தனது தாயார் ராஜம்மாளிடம் இரவு 10.30 மணிக்கு தெரிவித்தார்.

கணவர் இறந்த தகவல் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த ராஜம்மாளின் கண்களில் இருந்து கண்ணீர் வடிய, சில நொடிகளிலேயே உயிர் பிரிந்தது.

வாழ்க்கையில் இணை பிரியாமல் வாழ்ந்த கணவன் - மனைவி இருவரும் மரணத்தையும் ஒரே நாளில் தழுவி உள்ளனர். வைகுண்ட ஏகாதசி நாளில் உயிரிழந்த தம்பதிக்கு, அப்பகுதி மக்கள், அஞ்சலி செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments